உள்ளடக்கத்துக்குச் செல்

வாரணாசி மாநகராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாரணாசி மாநகராட்சி

வாரணாசி நகர் நிகாம்
வகை
வகை
தலைமை
அசோக் திவாரி, பாரதிய ஜனதா கட்சி[1]
மாநகராட்சி ஆணையர்
பிரணாய் சிங், இஆப
கட்டமைப்பு
உறுப்பினர்கள்100
அரசியல் குழுக்கள்
ஆளும் கட்சி (62)

எதிர்கட்சி (38)

தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
4 மே 2023
அடுத்த தேர்தல்
2028
கூடும் இடம்
வாரணாசி, உத்தரப் பிரதேசம்
வலைத்தளம்
https://nnvns.org.in:/

வாரணாசி மாநகராட்சி (Varanasi Municipal Corporation) என்பது இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசி நகரத்தின் நிர்வாகக் குழுவாகும். மாநகராட்சியில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். மாநகரத்தந்தைத் தலைமையில் செயல்படும் குழு நகரின் உள்கட்டமைப்பு மற்றும் பொதுச் சேவைகளை நிர்வகிக்கிறது. மாநிலத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் மாநகராட்சியின் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுச் செயலாற்றுகின்றனர்.[3][4]

வரலாறு

[தொகு]

வாரணாசி மாநகரத் தந்தை-குழுவுடன் ஒரு பெருநகர நகராட்சியாக இருந்து வருகிறது. வாரணாசி மாநகராட்சி 1959ஆம் ஆண்டின் மாநகராட்சி சட்டத்தின் கீழ் ஒரு நகர் மகாபலிகாவாக 24 சனவரி 1959 அன்று நிறுவப்பட்டது. 1994ஆம் ஆண்டில் இது நகர் நிகம் என்று தரப்படுத்தப்பட்டது. 110 பகுதிகளுடன் தற்போது இதன் கீழ் உள்ள மொத்தப் பரப்பளவு சுமார் 130 சதுர கி. மீ. ஆகும்.[5] வாரணாசி மாநகராட்சி பொதுக் கல்வி, நூலகங்கள், பொதுப் பாதுகாப்பு, பொழுதுபோக்கு வசதிகள், சுகாதாரம், நீர் வழங்கல், உள்ளூர் திட்டமிடல் மற்றும் நலன்புரி சேவைகளுக்குப் பொறுப்பாகும். மாந்கரத் தந்தை மற்றும் உறுப்பினர்கள் ஐந்தாண்டுக் காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

திட்டங்கள்

[தொகு]

தூய்மை இந்தியா இயக்கம், பாரம்பரிய நகர மேம்பாடு மற்றும் வளர்ச்சித் திட்டம், அம்ருத் மற்றும் சீர்மிகு நகரத் திட்டம் போன்ற பல்வேறு அரசுத் திட்டங்களில் வாரணாசி மாநகராட்சி ஒரு பகுதியாக உள்ளது.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "In Varanasi BJP’s Ashok Tiwari defeats SP by 1.33L votes". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/varanasi/in-varanasi-bjps-ashok-tiwari-defeats-sp-by-1-33l-votes-to-become-new-mayor/articleshow/100216621.cms?from=mdr. பார்த்த நாள்: 21 May 2023. 
  2. "BJP secures 62 of 100 seats in Varanasi". Times of India. பார்க்கப்பட்ட நாள் 21 May 2023.
  3. Department of Appointment and Personnel, Government of Uttar Pradesh
  4. NAGAR NIGAM VARANASI
  5. "Varanasi City".
  6. Smart City Varanasi
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாரணாசி_மாநகராட்சி&oldid=3950099" இலிருந்து மீள்விக்கப்பட்டது